உயிரிழந்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம் – பாராளுமன்றம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் ட்வீட்!!

0

கடந்த சில வருடங்களுக்கு முன் இந்திய நாட்டின் கோவிலாக கருதப்பட்ட பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இந்த கோர நிகழ்வு நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் உட்பட பல தலைவர்கள் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்ற தாக்குதல்:

கடந்த 2001 ம் ஆண்டு நமது பாராளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்ட தொடர் நடை பெற்று கொண்டிருந்த போதே நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் -இ -முகமது அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் போலி அடையாளங்களுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து ஏ .கே .47 துப்பாக்கியின் மூலம் தாக்குதல் நடத்த துவங்கினர். அப்போது மாநிலங்களவையும், மக்களவையும் 40 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜிபாயியும், அப்போதைய எதிர்கட்சி தலைவர் சோனியா காந்தியும் சற்று முன்புதான் வெளியேறி இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போதைய துணை குடியரசு தலைவர் திரு.கிருஷ்ணகாந்த் அவர்களை தாக்க முயன்றபோது பாதுகாப்பு வீரர்களும் அதிகரிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த தீவிரவாதிகள் 5 பேரும் 7 பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். இதில் தொடர்புடைய அப்சல் குரு முதலானவர்கள் கைது செய்யப்பட்டனர் . இந்திய அரசின் வலியுறுத்தல் காரணமாக அந்த தீவிரவாத அமைப்பின் தலைவன் மௌலானா மஸூத் அசார் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் ஜெயிலில் தூக்கிலிடப்பட்டான்.

நினைவு தினம்:

இந்த துயர நிகழ்வில் 19 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பிரதமர்நரேந்திரமோடி, ஜனாதிபதி. ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி. வெங்கைய நாயுடு ஆகியோர் தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.இன்று இவர்கள் அனைவரும் தமது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தமது கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பிரதமர். நரேந்திர மோடி கூறுகையில், “2001 ல் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒரு போதும் மறக்காது எனவும் பாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூர்வோம் ,எப்போதும் இந்தியா அவர்களுக்கு நன்றி செலுத்தும்” எனவும் பதிவிட்டுள்ளார்.

கொரோனவால் துன்பப்படும் போது புதிதாக பாராளுமன்றம் யாருக்காக?? – கமல் காரசார ட்வீட்!!

ஜனாதிபதி. ராம் நாத் கோவிந்த் பதிவிட்டிருப்பதாவது, “2001 இதே நாளில் பாராளுமன்றத்தை பாதுகாத்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த துணிச்சலான தியாகிகளை இந்தியா என்றும் நன்றியுடன் நினைவுகூரும் அதே வேளையில் பயங்கரவாத சக்திகளை தோற்கடிப்பதற்கான எங்களது வழியை நாங்கள் பலப்படுத்துகிறோம் ” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here