அடியாத்தி.., “கேஜிஎப்” படத்தையே தூக்கி சாப்பிடும் போல.., அதிரடியாக வெளியான “கப்ஜா” ட்ரைலர் வீடியோ!!

0
அடியாத்தி..,
அடியாத்தி.., "கேஜிஎப்" படத்தையே தூக்கி சாப்பிடும் போல.., அதிரடியாக வெளியான "கப்ஜா" ட்ரைலர் வீடியோ!!

நடிகர் சுதீப் நடித்த கப்ஜா திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

கப்ஜா படம்

ஆர். சந்துரு படைப்பில் கேங்ஸ்டர் வித் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கப்ஜா திரைப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து லீடு ரோலில் நடித்துள்ளனர். இப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என ஏழு மொழிகளில் வெளியாக இருக்கிறது. ரீ சித்தேஸ்வரா எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சந்திரசேகர் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு, சுதா மற்றும் தேவ் கில் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இந்த படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக கே. ஜி எப் பட புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் குறித்து ஆர். சந்துரு சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இப்படம் என்னுடைய கனவு படம். கொரோனா காலத்தில் இருந்து போராடி இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறோம்.

சூப்பர் ஸ்டார் கெஸ்ட் ரோல் கொடுக்கும் “லால் சலாம்” ஷூட்டிங் ஆரம்பம்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

எனக்கு படிப்பு சரியாக வராததால் சினிமா பக்கம் கவனம் செலுத்தினேன். கப்ஜா திரைப்படம் என்னுடைய முதல் பான் இந்திய படம் என்று கூறினார். தற்போது படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கும் பொழுது கேஜிஎப் படத்தையே தூக்கி சாப்பிடும் போல என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இப்படம் வருகிற மார்ச் மாதம் 17ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here