வாங்குறதே கம்மி தான்.. இதுல இன்னும் குறைத்தால் எப்படி .., தேசிய விருது பெற்ற நடிகர் உருக்கம்!!

0
வாங்குறதே கம்மி தான்.. இதுல இன்னும் குறைத்தால் எப்படி .., தேசிய விருது பெற்ற நடிகர் உருக்கம்!!
வாங்குறதே கம்மி தான்.. இதுல இன்னும் குறைத்தால் எப்படி .., தேசிய விருது பெற்ற நடிகர் உருக்கம்!!

குணச்சித்திர மற்றும் காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து சமீபத்தில் நடிகர் அப்புக்குட்டி பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அப்புக்குட்டி

தமிழ் சினிமாவில் அழகிய தமிழ்மகன், வீரம், வெண்ணிலா கபடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் அப்புக்குட்டி. அதன் பின்னர் அழகர்சாமி குதிரையின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி பட்டிதொட்டியெல்லாம் பெயர் எடுத்தார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய திரைப்பட விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குணசித்திர நடிகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் கூறியதாவது, எங்களை போன்ற நடிகர்களுக்கு சராசரியாக ஒரு தொகையை வைத்திருப்பார்கள். அந்த தொகை வீட்டு செலவுக்கே சரியாக இருக்கும். மற்ற வேலைகளுக்கு பழகாமல் சினிமாவே கதி என்று கிடந்து விட்டோம். அவர்கள் சொன்ன பணத்தை கொடுக்காமல் குறைத்து கொடுத்தால் என்ன செய்வது. நான் தற்போது 1 லட்சம் வாங்குகிறேன்.

அடியாத்தி.., “கேஜிஎப்” படத்தையே தூக்கி சாப்பிடும் போல.., அதிரடியாக வெளியான “கப்ஜா” ட்ரைலர் வீடியோ!!

ஏதாவது ஒரு கதையில் நடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். அன்று குணசித்திர நடிகர்களுக்கு சம்பளம் பிரச்சனை வந்தால் முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் பார்த்து கொள்வார். ஆனால் இப்போது யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறினார். இவர் கடைசியாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here