ஆதார் ஒன்னு போதும்., இனி பான், ரேஷன், டிரைவிங் லைசன்ஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணலாம்! அரசின் ஜாக்பாட் திட்டம்!!

0
ஆதார் ஒன்னு போதும்., இனி பான், ரேஷன், டிரைவிங் லைசன்ஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணலாம்! அரசின் ஜாக்பாட் திட்டம்!!
ஆதார் ஒன்னு போதும்., இனி பான், ரேஷன், டிரைவிங் லைசன்ஸ் எல்லாத்தையும் அப்டேட் பண்ணலாம்! அரசின் ஜாக்பாட் திட்டம்!!

கடந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் இணைப்புகளை மத்திய மாநில அரசுகள் கட்டாயமாக்கி வருகிறது. இதன்படி தற்போது, இந்த இணைப்பின் மூலம் புதிய சேவைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களில் நுகர்வோர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்டவைகளில் பல்வேறு திருத்தங்கள் இருக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நுகர்வோர்கள் இதனை சரிசெய்ய ஒவ்வொரு துறை அலுவலங்கங்களிலோ அல்லது வலைத்தளத்திலோ அலைய வேண்டி இருக்கும். இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பயனாளர்களின் தேடல்களை குறைக்க புதிய வலைத்தளத்தை வடிவமைத்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டையில் திருத்தங்களை மேற்கொண்டால் போதும் தானாகவே மற்ற ஆவணங்களில் விவரங்கள் திருத்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

NEET நுழைவுத் தேர்வு கட்டணம் திடீர் உயர்வு., மத்திய அரசின் முடிவால் அதிருப்தியில் மாணவர்கள்!!

மேலும் இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் உட்பட அந்தந்த ஆவண துறைகளிடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. இத்திட்டம் விரைவில் அமலாகும் பட்சத்தில் மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here