NEET நுழைவுத் தேர்வு கட்டணம் திடீர் உயர்வு., மத்திய அரசின் முடிவால் அதிருப்தியில் மாணவர்கள்!!

0
NEET நுழைவுத் தேர்வு கட்டணம் திடீர் உயர்வு., மத்திய அரசின் முடிவால் அதிருப்தியில் மாணவர்கள்!!
NEET நுழைவுத் தேர்வு கட்டணம் திடீர் உயர்வு., மத்திய அரசின் முடிவால் அதிருப்தியில் மாணவர்கள்!!

இந்தியாவில் UG, PG மருத்துவ படிப்புகளை மேற்கொள்வதற்கு NEET நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இதையடுத்து நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது என ஏற்கனவே தெரிவித்திருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கான விண்ணப்பங்களும் https://neet.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் ஏப்ரல் 7ம் தேதி வரை வரவேற்கப்படுகிறது. இந்நிலையில் இந்த நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.100 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுப் பிரிவினருக்கு ரூ.1600 ஆக இருந்த கட்டணம் ரூ.1700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக்., 5 ஆண்டுகளுக்குப் பின் உயரும் மதுபான விலை! 15 முதல் 20% உயர வாய்ப்பு!!

மேலும், ஓபிசி பிரிவினருக்கு ரூ.1600 மற்றும் SC/ST பிரிவினருக்கு ரூ.1000 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நீட் தேர்வை சமாளிக்க முடியாத பல மாணவர்கள், இந்த திடீர் கட்டண உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர் மற்றும் மாணவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here