கமல் நடிக்கும் ‘பாபநாசம் 2’ திரைப்படம் – ஜோதிகா அல்லது மீனாவை நடிக்க வைக்க பரிசீலனை!!

0

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகம் தமிழில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகை கவுதமிக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாபநாசம் 2

மலையாளத்தில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடிகர் மோகன்லால் மற்றும் மீனா ஆகியோர் நடித்திருந்தனர். கேரளாவில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியான படத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழில் வெளியான ‘பாபநாசம்’ படமும் நல்ல வசூலை பெற்றுத்தந்தது. இந்நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் படமாக்கப்பட்டு, தற்போது வெளிவரவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து தமிழில் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளது.

#TNvsMP விஜய் ஹசாரே கோப்பை – மத்திய பிரதேச அணி அசத்தல் வெற்றி!!

 

இந்த படத்திலும் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளது. நடிகர் கமல் மற்றும் நடிகை கவுதமிக்கு இடையேயுள்ள குடும்ப பிரச்சனை காரணமாக வேறு நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் நடிகை ஜோதிகாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

திருமணத்துக்கு பின்பு நடிகை ஜோதிகா ஏற்று நடித்து வரும் கதாப்பாத்திரங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதனால் நடிகை ஜோதிகாவை ‘பாபநாசம் 2’ படத்தில் நடிக்க வைக்க யோசனைகள் எழுந்துள்ளது. மேலும் ‘திரிஷ்யம்’ படத்தில் நடித்துள்ள நடிகை மீனாவையும் பரிசீலித்து வருகிறார்கள் படக்குழுவினர். ஏற்கனவே நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை ஜோதிகா ‘தெனாலி’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here