நரேந்திர மோடி மைதானம் – ரிலையன்ஸ், அதானி பெயர் கூடுதல் இணைப்பு!!

0

அகமதாபாத்தில் உள்ள புதிய மைதானத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக நரேந்திர மோடி மைதானம் என்று பெயரிடப்பட்டது. தற்போது அந்த மைதானத்தில் அதானி மற்றும் ரிலையன்ஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

அஹமதாபாத்:

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தங்களது மூன்றாவது டெஸ்ட் போட்டியை அஹமதாபாத் மைதானத்தில் வைத்து விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தில் சுமார் 1,10,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து போட்டியை காணலாம். அந்த அளவிற்கு இந்த மைதானம் பெரிது. மேலும் உலகிலேயே பெரிய மைதானம் என்ற புகழையும் இந்த மைதானம் பெற்றுள்ளது. மேலும் இந்த மைதானம் பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த மைதானத்திற்குள் நிழல் விழாது. மேலும் இந்த மைதானத்தில் மழை பெய்தால் அதுவாகவே தண்ணீரை வெளியேற்றும் தன்மையை உடையது. அதேபோல் அங்கு பெரிய உணவகமும் உள்ளது. தற்போது அந்த மைதானம் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. இன்று போட்டி துவங்குவதற்கு சில நிமிடத்திற்கு முன்பு இந்த மைதானத்தின் பெயரை மாற்றினர்.

#INDvsENG பகலிரவு டெஸ்ட் – சுழற்பந்து வீச்சில் அசத்தும் இந்தியா! 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!!

அதன்படி இந்த மைதானத்திற்கு நரேந்திர மோடி என்று பெயர் வைத்தனர். தற்போது அதே மைதானத்தில் இன்னும் இரண்டு பெயர்களை வைத்துள்ளனர். அதாவது மைதானத்தின் ஒரு முனைக்கு ரிலையன்ஸ் என்று பெயர் வைத்தனர். மேலும் மற்றொரு மைதானத்தின் முனைக்கு அதானி என்று பெயர் வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here