ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் – ஜூன் மாதத்திற்கும் சம்பளம்..!

0
Salary
Salary

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்திற்கும் சம்பளம் வழங்கப்படும் என கல்வித்துறை அறிவித்து உள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

ஜூன் மாத சம்பளம்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வருமானம் இன்றி மக்கள் தவித்த நிலையில் அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இருப்பதால் சிறிது சிறிதாக தொழில்கள் புத்துயிர் பெற்று வருகின்றன. ஊரடங்கால் அரசிற்கு வருமானம் குறைந்த காரணத்தால் பல்வேறு மாநில அரசுகள் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வதற்கு அவசர சட்டத்தை பிறப்பித்தன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu Government
Tamilnadu Government

சீன பொருட்களை புறக்கணிக்க முடியுமா..? இந்திய நிறுவனங்களின் நிலைப்பாடு என்ன..!

ஆனால் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை. மாறாக அரசின் செலவினங்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. தற்போது பகுதிநேரமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் ஜூன் மாதத்திற்கும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் எனவும், அதே சமயம் ஜூன் மாதம் வேலை பார்க்காத நாட்களை வரும் காலங்களில் ஈடு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here