ஜூன் 21 சர்வதேச யோகா தினம் – நாட்டு மக்களுக்கு மோடி கோரிக்கை…!

0
modi yoga
modi yoga

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால்  அனைவரும் அவர்களது வீட்டில இருந்தவாறே யோகா தினத்தை அனுசரிக்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் இயக்குனர் சச்சி மரணம் – சோகத்தில் திரையுலகம்…!

ஜூன் 21 யோகா தினம் மோடி அழைப்பு

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஜூன் 21ந் தேதியை சர்வதேச யோகா தினமாக கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின்படி ஐ.நா.அறிவித்தது.எனவே வரும் 21 தேதி 6 வது சர்வதேச யோகா தினம் வருகிது எனவே அன்றைய தினம் பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு வீடியோ கான்பரன்ஸில் உரையாற்றுகிறார்.நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது அதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு தன குடும்பத்தினருடன் யோகா தினத்தை அனுசரிக்க வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

june 21 yoga day
june 21 yoga day

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “தொற்று-நோயால் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம், ஆனால் நமது உற்சாகம் அல்ல இந்த ஆண்டு யோகா தினத்தை வீடுகளிலிருந்து அனுசரிப்போம். குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here