ஏப்ரல் 22ம் தேதி முதல் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு – மாநில அரசு அதிரடி!!

0

கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு தற்போது அதிகமான அளவில் இந்தியாவில் காணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊரடங்கு உத்தரவு:

நாட்டில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களை மிக அதிகமான அளவில் தாக்கி வருகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்களது வேலையை இழந்து தவிக்கின்றனர். மேலும் பலர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்துவிடுகின்றனர். அனைத்து உலக நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டும் எந்த உலக நாடும் தற்போது கொரோனாவில் இருந்து முழுவதுமாக மீளவில்லை என்பது வேதனைக்குரியதே.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் நாட்டில் நாள் ஒன்றுக்கு கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு சுமார் 2 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி – கலக்கத்தில் கட்சியினர்!!

இந்நிலையில் தற்போது ஜார்க்கண்ட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 22ல் இருந்து 29ம் தேதி வரை தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவில் இருந்து அத்யாவசிய பணிகள், கட்டுமான பணிகள், வேளாண் பணிகள் மற்றும் சுரங்க பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில் போன்ற மதசார்ந்த கூடங்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கு தடை என்று அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here