மேலும் ஒரு மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு!!

0
Lock
Lock

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மாநிலத்திலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கு (அன்லாக் 1.0) வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கே அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் ஜூன் 29ம் தேதி ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முடிவு மருத்துவக் குழுவின் ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Lock down
Lock down

மேலும் ஒரு திமுக எம்எல்ஏ.,விற்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி..!

ஏற்கனவே மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்து உள்ளார். தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டால் அதில் அதிகப்படியான தளர்வுகள் வழங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here