11ம் வகுப்பு படிக்க விண்ணப்பிக்கும் கல்வி அமைச்சர் – கற்றலுக்கு வயது தடையில்லை!!

0

ஜார்க்கண்ட் மாநில கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ அரசாங்கத்துடன் இணைந்த ஒரு கல்லூரியில் 11 ஆம் வகுப்பில் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ளார். அவர் அறிவு மற்றும் கற்றலுக்கான வயதுத் தடை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

கல்வி அமைச்சர்:

53 வயதான அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ 25 ஆண்டுகளுக்குப் பிறகு தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளதால் போகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ இன்டர் கல்லூரியில் தனது விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளார். “நான் ஒரு அரசியல்வாதி. எனவே, அரசியல் அறிவியல் பாடம் நிச்சயம் இருக்கும். மீதமுள்ள பாடங்களை மிக விரைவில் தேர்வு செய்வேன்” என்று அவர் கூறினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் 1995 ஆம் ஆண்டில், மெட்ரிகுலேஷன் (வகுப்பு -10) தேர்வுகளில் தேர்ச்சி பெற்றார். அவர் ஜார்க்கண்டின் கல்விஅமைச்சராக நியமிக்கப்பட்டதிலிருந்து, அவர் பொது மக்களிடமிருந்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் ஒரு பகுதியினரிடமிருந்தும் கல்வித்தகுதி குறித்து விமர்சனங்களை எதிர்கொண்டார். பின்னர், தனது கல்வியை மீண்டும் தொடங்க முடிவு செய்தார்.

அமைச்சர் பணிக்கும், வழக்கமான வகுப்புகளுக்கும் இடையில் அவர் எவ்வாறு சமநிலையை ஏற்படுத்துவார் என்று கேட்கப்பட்டபோது, ​​”நான் இன்று சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளேன். எனது விண்ணப்பம் விதிகளின் கீழ் வந்தால், எனக்கு அனுமதி கிடைக்கும். அதன்பிறகு, சமநிலையை ஏற்படுத்துவது பற்றி நான் சிந்திப்பேன்” என கூறியுள்ளார்.

அரசுப்பள்ளிகளில் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!!

ஜார்கண்ட் அமைச்சரவையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ஏடிஆர்) அறிக்கையின்படி, ஜார்க்கண்டின் சுகாதார அமைச்சர் பன்னா குப்தா, போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரன், சமூக நலத்துறை அமைச்சர் ஜோபா மன்ஜி, தொழிலாளர் மந்திரி சத்யானந்த் போக்தா ஆகியோரும் தங்களது கல்வித் தகுதியை வகுப்பு -10 தேர்ச்சி என்று அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here