முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் – முதல்வர் திறப்பு வைப்பு!!

0

சென்னை மெரினா கடற்கரையில் தற்போது மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம்:

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி அன்று உடல் நல குறைவால் மரணம் அடைந்தார். பின்பு அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. பின்பு மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டவேண்டும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது. இதனை முன்னிட்டு கடந்த 2018ம் ஆண்டு நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நினைவிடம் திறப்பு:

தற்போது சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட முறையில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 80 கோடி மதிப்பில் இந்த நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடம் பார்ப்பதற்கு பீனிக்ஸ் பரவி போல் காட்சியளிக்கும். மேலும் இந்த நினைவிடம் 15மீ உயரம், 30.5 மீ நீளம் மற்றும் 43 மீ அகலத்தை கொண்டு கட்டப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார்.

பெங்களூர் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா – நான்கு வருட சிறைவாசம் முடிவு!!

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் பன்னிர்செல்வம், சட்டப்பேரவை தலைவர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். பொதுமக்கள் விழாவை காண்பதற்காக சாலையில் ஓர் பெரிய திரை அமைக்கப்பட்டது. அந்த திரை மூலம் தொண்டர்கள் அனைவரும் விழாவை கண்டுகளித்தனர். திறப்பு விழாவிற்கு பின்பு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வலையத்தை வைத்து தங்களது மரியாதையை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here