ஜெயலலிதா வீட்டில் 4 கிலோ தங்கம் & 601 கிலோ வெள்ளி – தமிழக அரசு அரசிதழில் வெளியீடு..!

0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது எனவும் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வேதா இல்லம்..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்தது. இப்படி அரசு நினைவில்லம் ஆக்குவதற்காக இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் 68 கோடி ரூபாய் செலுத்தியது. இதையடுத்து ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடைமையானது. தொடர்ந்து அதனை நினைவில்லம் ஆக்குவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதாவின் இந்த வேதா இல்ல வளாகத்தை பொறுத்தவரையில் அங்குள்ள அசையா சொத்துக்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதா வீட்டில் இருந்த பொருட்கள் குறித்த விவரங்களையும் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!!

பொருட்கள் குறித்த விபரம்..!

4 கிலோ 372 கிராம் தங்கம், 601 கிலோ 424 கிராம் வெள்ளி, 162 வெள்ளி பொருட்கள், 6514 சமையல் பெருட்கள், 8,376 புத்தகங்கள், 394 நினைவு பரிசுகள், 11 டிவி,                10 பிரிட்ஜ், 38 ஏசி, 556 பர்னிச்சர், 15 பூஜை பொருட்கள், 1055 காட்சி பெட்டி பொருட்கள்., துணி, தலையானி, பெட்சீட்,டவல் காலணி என 10,438, 29 தொலைபேசி/ கைபேசி 221 சமையல் மின்சார பொருட்கள், 251 மின்சார பொருட்கள் 6 கடிகாரம் என மொத்தம் 32,721 பொருட்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here