கொரோனா நோயாளிகளுக்கு 30 நிமிடத்தில் மருத்துவமனை படுக்கை வசதி – மாநில முதல்வர் அதிரடி உத்தரவு!!

0

கொரோனா உறுதியான நோயாளிகளுக்கு 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனையில் படுக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளார். மேலும் அவசர காலங்களில் அரசு மருத்துவமனைகளில் ரெமெடிசிவர் மருந்தை சேமித்து வைக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

முதல்வர் உத்தரவுகள்:

“கிடைக்கும் படுக்கைகளை திறம்பட பயன்படுத்துங்கள். கோவிட் -19 நோயாளிகளுக்கு படுக்கைகள் ஒதுக்கப்படவில்லை என்று எந்த புகாரும் இருக்கக்கூடாது. 30 நிமிடங்களுக்குள் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காவிட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு”என்று ஆந்திர முதல்வர் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனுமதி மறுக்கும் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.

“கோவிட் -19 நோயாளிகளுக்கு 128 மாவட்ட மருத்துவமனைகள் உள்ளன. அங்கு கிடைக்கும் வசதிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு மருத்துவமனைகளிலும், மற்றும் 10 மாநில அளவிலான மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கும் தன்மையும் ஆன்லைனில் காட்டப்பட வேண்டும், ”என்று வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் மறுஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

நோயாளிகளுக்கு புகார் அளிக்க கட்டணமில்லா எண்களை வெளியிட வேண்டும். மேலும் கட்டணமில்லா எண்கள் 104 மற்றும் 14410, மற்றும் மாவட்ட அளவிலான கட்டணமில்லா எண்கள் ஆகியவை விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அழைப்பாளர்கள் தேவையான அனைத்து உதவிகளையும் பெற வேண்டும், என்று அவர் வலியுறுத்தினார்.

128 மாவட்ட கோவிட் மருத்துவமனைகளில் சுமார் 32,000 படுக்கைகளும், மாநில கோவிட் மருத்துவமனைகளில் 8,000 படுக்கைகளும் உள்ளன என்றும், நோயாளிகள் அவர்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த வசதிகளில் ஏதேனும் ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அவசர காலங்களில் அரசு கோவிட் மருத்துவமனைகளில் மருந்து ரெமெடிசிவரை சேமித்து வைக்குமாறு முதலமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சுமார் 17,000 மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

“நாங்கள் ஒரு பெரிய அளவில் சோதனைகளை நடத்தி வருகிறோம் – ஒரு மில்லியன் மக்களுக்கு 31,000 சோதனைகள். கார்ப்பரேட் மருத்துவமனைகள் இல்லாத போதிலும், மாநிலத்தில் இறப்பு விகிதம் 1.06 சதவீதம் மட்டுமே, அதே நேரத்தில் தேசிய சராசரி 2.5 சதவீதமாகும் ”என்று அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here