ஜல்லிக்கட்டு 2020 – தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்

0
ஜல்லிக்கட்டு 2020 - தமிழக அரசு சுற்றுலாத் துறை புதிய திட்டம்

இந்த முறை தமிழக அரசு சுற்றுலாத் துறை ஜல்லிக்கட்டினைக் காண புதிய திட்டத்துடன் கூடிய 3 நாள் சுற்றுலாவையும் அறிவித்துள்ளது.  16 ஜனவரி 2020 முதல் 19 ஜனவரி 2020 அதிகாலை வரை இந்த சுற்றுலா நிகழ இருக்கிறது.  இதில் சேர முன்பதிவு செய்ய வேண்டும்.

சுற்றுலாத் திட்டம்:

பொங்கலுக்கு மறுநாள் 16ம் தேதி இரவு 9 மணிக்கு , திருவல்லிக் கேணி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து பேருந்து புறப்படுகிறது.  17ம் தேதி அதிகாலை மதுரையை அடையும்

     *காலை உணவிற்கு பிறகு பேருந்து அலங்காநல்லூருக்கு செல்லும்.

     *ஜல்லிக் கட்டு போட்டிகளை காண உங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும்.

     *ஜல்லிக்கட்டு முடிந்த பிறகு, அன்றைய தினம் இரவு விடுதியில் தங்க ஏற்பாடு செய்யப்படும்.

     *மறுநாள் காலை முதல் இரவு வரை மதுரையின் முக்கிய சுற்றுலாத் தளங்களை காண நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், காந்தி அருங்காட்சியகம், அழகர் கோவில் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

கட்டண விபரம்:

     *பெரியவர்களுக்கு கட்டணம் – ரூ. 4300

     *சிறியவர்களுக்கு கட்டணம் – ரூ. 3450

     *குளிர் சாதன அறை வசதி வேண்டுவோர் கட்டணம் – ரூ. 4500

மேலும் தகவல்களுக்கு www.tamilnadutourism.org என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here