நடிகர் சூர்யாவை பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் – ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு!!

0

ஜெய்பீம் திரைப்படத்தின் மூலமாக பார்வதியம்மாளின் உண்மை கதையை வெளியே கொண்டுவந்த இயக்குனர் மற்றும் சூர்யாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தன் நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ராகவா லாரன்ஸ்:

TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ”ஜெய்பீம்” திரைப்படம் பார்வதியம்மாளின் உண்மை கதையின் பிரதிபலிப்பில் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தினை பார்த்த பலரும் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் மற்றும் இயக்குனர் ஆகிய அனைவரையும் பாராட்டினார். இந்த திரைப்படத்தின் மூலமாகவே பார்வதியம்மாளின் நிலை அனைவருக்கும் அம்பலமானது. இந்த திரைப்படம் வெளியானதற்கு பிறகு பலரும் பார்வதியம்மாளுக்கு உதவி செய்து வருகின்றனர்.

சூர்யா இவருக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் இவருக்கு வீடு கட்டி தருவதாக அறிவித்திருந்தார். தற்போது அரசாங்கமே இவருக்கு வீடு கட்டி தர உள்ளத்தால் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை பார்வதியம்மாளின் பிள்ளைகளுக்கு வழங்க உள்ளார் ராகவா லாரன்ஸ். பார்வதியம்மாளின் நிலையை உலகிற்கு உணர்த்திய சூர்யா ஜெயபீம் பட குழுவினருக்கும் மற்றும் தமிழக முதல்வருக்கும் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here