‘கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை மூடப்படும்’ – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாக வசூலித்தி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது. அனால் இதை தனியார் மருத்துவமனைகள் பின்பற்றாமல் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பலமடங்கு கட்டணத்தை வாங்கி வருகின்றன. இதை நிறுத்தும் வகையில் ஆந்திர முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி விதித்திருக்கும் உத்தரவுகள் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆந்திராவில் கொரோனா சிகிச்சையை அரசு மருத்துவமனை இலவசமாக அளித்து வருகிறது. மாநில அரசின் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டத்தின் மூலம் பல தனியார் மருத்துவமனைகளும் இலவசமாக கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது. இந்த ‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டம் ஆண்டு வருமான ரூபாய் 5 லட்சம் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வருடம் 5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு தனியர் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் ரூபாய் 5000 முதல் ரூபாய் 11,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனால் பெருவாரியான தனியார் மருத்துவமனைகள் இந்த கட்டணத்தை விட அதிக அளவு கட்டணத்தையே பெற்று வருகின்றது. இதை தடுக்கும் வகையில் கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பது தெரிந்தால் அந்த மருத்துவமனையை மூடிவிட்டு, அரசே அந்த தனியார் மருத்துவமனையை ஏற்று நடத்தும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் எதிரொலி – மேற்கு வங்கத்தில் மம்தாவை தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!!

மேலும், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் பொதுமக்கள் 1902 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும், அந்த புகார்களை விசாரிக்க ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியை நிர்மாணம் செய்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இதனால் ஆந்திராவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கான கட்டணம் சமமாக நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here