‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் இறப்பு விகிதம் குறைவு தான்’ – மாவட்டம் மேயர் அறிவிப்பு!!

0

கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மும்பை மேயர்கிஷோரி பெட்னேகர் தற்போதைய இறப்பு விகிதம் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது எனவும் கட்டளை மையம் (War Room ) மூலம் நகரத்தின் COVID நிலைமையை கண்காணிப்பதாகவும் கூறினார்.

அரசின் முயற்சி:

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த தொற்று எண்ணிக்கை 2,06,58,234 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தீவிரமாக பரவிவரும் கொரோனா பரவலை கண்காணிக்கவும் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. ‘கட்டளை மையம்’ (War Room )ஒன்றை நிறுவி அதன்மூலம் நகரத்தின் COVID நிலைமையை கண்டறிவதாகவும் மேலும் மருத்துவமனையின் படுக்கை விவரங்களையும் அதில் தெரியப்படுத்துவதாகவும் மும்பை மேயர்கிஷோரி பெட்னேகர்தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்களின் ஒத்துழைப்பின் காரணத்தாலும் அரசின் தீவிரமான தடுப்பு பணிகளின் காரணத்தாலும் முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here