சென்னை வந்த ஜடேஜா…, ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அதிரடி காட்டுவாரா??

0
சென்னை வந்த ஜடேஜா..., ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அதிரடி காட்டுவாரா??
சென்னை வந்த ஜடேஜா..., ரஞ்சி போட்டியில் தமிழ்நாடு அணிக்கு எதிராக அதிரடி காட்டுவாரா??

ரஞ்சி டிராபியில், தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் தனது பார்மை மீட்க ஜடேஜா சென்னை வந்தடைந்துள்ளார்.

ஜடேஜா:

இந்திய அணி அடுத்த மாதம் 9ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபியை விளையாட இருக்கிறது. 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட இந்த டிராபியில், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இதில், கடந்த வருடம் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்த இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம் பெற்றிருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால், இவர் இந்த டிராபியில் விளையாட வேண்டுமானால், இந்தியாவின் உள்ளூர் போட்டிகள், ஏதாவது ஒன்றில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, ஜடேஜா இந்தியாவின் உள்ளூர் போட்டியான ரஞ்சி டிராபியில், நாளை நடைபெற உள்ள தமிழ் நாடு மற்றும் சௌராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

U19 வேர்ல்ட் கப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா…, அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!

இந்த போட்டியானது, நாளை சென்னையில் உள்ள MA சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில், சௌராஷ்டிரா அணி சார்பாக களமிறங்க உள்ள ஜடேஜா, சென்னை வந்துள்ளதே தெரிவிக்கும் வகையில், தனது டிவீட்டர் பக்கத்தில் வணக்கம் சென்னை என பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here