U19 வேர்ல்ட் கப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா…, அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!

0
U19 வேர்ல்ட் கப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா..., அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!
U19 வேர்ல்ட் கப்: இலங்கையை வீழ்த்திய இந்தியா..., அரையிறுதிக்கு தகுதி பெற்றதா?? முழு விவரம் உள்ளே!!

U19 பெண்களுக்கான டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அசத்தி உள்ளது.

U19 வேர்ல்ட் கப்:

ஐசிசி சார்பாக 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கோப்பை டி20 தொடரின் முதல் சீசன் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உட்பட 16 அணிகள் பங்கு பெற உள்ளன. இதில், குரூப் D யில், உள்ள தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் UAE ஆகிய அணிகளை லீக் சுற்றில் வீழ்த்திய இந்திய அணி நேரடியாக சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து, இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி நேற்று போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய பில்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்தனர்.

இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய சார்பாக சோப்ரா 4, காஷ்யப் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தனர். மிக எளிதில் அடைய கூடிய இலக்கை துரத்திய இந்திய அணி 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இந்த சூப்பர் 6ல் முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை வைத்தே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? என்பதை குறிப்பிட்ட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here