
நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரதின் காவல்துறை அதிகாரியாக பொறுப்பு வைப்பவர் தான் பல்வீர் சிங். இவர் சிறு குற்றங்களுக்காக விசாரணைக்கு வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை விசாரிப்பதற்கு ஐஏஎஸ் உயர் அதிகாரி அமுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்ய அமுதா பரிந்துரை செய்திருந்தார்.

மேலும் பல்வீர் சிங்கை விசாரணை செய்ய தமிழக அரசிடம் சிபிசிஐடி அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில் ஐ ஏ எஸ் அமுதா தாக்கல் செய்ய உள்ள விசாரணை அறிக்கையை தனக்கு வழங்க கோரி அருண்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு கொடுத்துள்ளார். மேலும் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையொட்டி இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.