
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இப்போது காவியா கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபனை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் பிரியா எப்போது மனம் மாறுவார் என ஜீவா காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் பிரியாவை சமாதானப்படுத்த அவரும் என்னென்னமோ செய்து பார்க்கிறார். இப்படி இருக்கையில் இனி வரும் எபிசோடுகளில் ஜீவா பிரியாவிடம் நம்ம சந்தோஷமா இருந்தா மட்டும் தான் காவியா பார்த்திபன், அர்ஜுன் ஐஸ்வர்யா எல்லோரும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று சொல்கிறார்.
தமிழக பள்ளி மாணவர்களே.., நாளை பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு.., அமைச்சர் சொன்ன தகவல்!!!
உடனே பிரியா ஜீவாவிடம் ஐஸ்வர்யா ஏதோ தப்பு செய்கிறாள். ஐஸ்வர்யா யாரோ ஒரு பையன் கிட்ட பேசுறத நான் பார்த்தேன். அது என்ன விஷயம்னு நீங்க தான் கண்டுபிடிச்சு மாமா கிட்ட சொல்லணும் என்கிறார். மேலும் இத நீங்க செஞ்சா மட்டும்தான் நான் உங்க கூட சேர்ந்து வாழ்வேன் என கண்டிஷன் போடுவாராம். இதனால் ஜீவா எப்படியோ ஐஸ்வர்யா வேற ஒரு பையனை காதலித்தால் என்ற விஷயத்தை கண்டுபிடித்து விடுவாராம். பின் இதை தன் அம்மா அப்பாவிடம் சொல்வாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் அரங்கேறுமாம்.