ஐபிஎல் மினி ஏலம் – 1,097 வீரர்கள் பதிவு!!

0

சென்னையில் வரும் 18ம் தேதி அன்று 14 வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தமாக 1,097 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். தற்போது இதுபற்றிய சில தகவலும் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்:

தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரம் முதல் துவங்க உள்ளது. மேலும் இந்த போட்டியை ஜூன் மாதம் தொடக்கம் வரை நடத்த திட்டமிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபில் வைத்து பிசிசிஐ சிறப்பான முறையில் நடத்தினர். இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரை இந்தியாவில் வைத்து நடத்துவதற்கான அனைத்து தரப்பு நடவடிக்கைகளையும் பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்த கால அவகாசம் இல்லாத காரணத்தினால் இந்த ஆண்டு மினி ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த மினி ஏலம் வரும் 18ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து தரப்பினர் காத்து வருகின்றனர்.

மேலும் இந்த மினி ஏலத்தில் பங்குபெற 1,097 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். அதில் 814 இந்திய வீரர்களும் மற்றும் 283 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். வெளிநாட்டு வீரர்களில் பெரும்பாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே இடம்பெற்றுள்ளனர். வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் காலம் நேற்றுடன் முடிவுவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா வருகை எதிரொலி – இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

வெளிநாட்டு வீரர்கள் விவரம்:

வெஸ்ட் இண்டீஸ் – 56 வீரர்கள், ஆஸ்திரேலியா – 42 வீரர்கள், தென் ஆப்ரிக்கா – 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து – 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் – 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் – 5 வீரர்கள், அயர்லாந்து – 2 வீரர்கள், அமெரிக்கா – 2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து – 1 வீரர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here