சசிகலா வருகை எதிரொலி – இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

1

வரும் திங்கள்கிழமை அன்று சிறைதண்டனை மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு பெங்களுருவில் இருந்து சசிகலா தமிழகம் வரவுள்ளார். இதனை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் அனைவரும் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

சசிகலா:

கடந்த 2017ம் ஆம் ஆண்டில் சொத்துகுவிப்பு வழக்கிற்காக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருக்கு 4 ஆண்டு காலம் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. கடத்த 20ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். மேலும் கடந்த 27 தேதி அன்று மருத்துவமனையில் இருந்த படியே சசிகலா தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார். பின்பும் மருத்துமனையில் சிகிச்சை மேற்கொண்ட சசிகலா தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆலோசனை கூட்டம்:

தற்போது அவர் பெங்களுருவில் தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இவர் வருகிற 8ம் தேதி அன்று தமிழகம் வரவுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்தார். தற்போது இதனை முன்னிட்டு இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

சித்ராவின் விரல் மற்றும் தொலைப்பேசி உரையாடல் ஆய்வு – அறிக்கை வரும் வரை தீர்ப்பு ஒத்திவைப்பு!!

இந்த ஆலோசனை கூட்டம் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அனைத்து பொறுப்பாளர்களையும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சசிகலா வருகைக்காக போஸ்டர்கள் மற்றும் பேனர்களை வைத்த அதிமுக நிர்வாகிகளை அதிமுக தலைமை நிர்வாகம் கட்சியில் இருந்து நீக்கி வருகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here