இலங்கையில் ஐபிஎல் போட்டி நடப்பது பாதுகாப்பானது அல்ல – சொல்கிறார் முத்தையா முரளிதரன்

0

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்  மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த போட்டிகள் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் ஊரடங்கு காரணத்தால் ஐபில் போட்டி நடக்கவில்லை. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஐபில் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தெரிவித்தது

ஐபிஎல் T20

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் 20 ஓவர்களை கொண்ட தொடராகும்.இந்திய மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு நாடுகளின் ரசிகர்களின் பெரும் வரவேற்பினை பெற்று வரும் ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக கடந்த மார்ச் 29ம் தேதி துவங்க இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.அண்ணல் வைரஸ் தாக்கம் குறையாததால் ஐபில் போட்டியை கலவரையின்றி தள்ளிவைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஆன பிசிசிஐ.அனால் உலக கோப்பை தொடருக்கு முன்பாக ஐ.பி.எல் நடத்தலாம் என்று பலரும் யோசனை கூறிவருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் நடத்த தயார்

இலங்கை கிரிக்கெட் அணி வாரியத்தின் தலைவர் ஷமி செல்வா கூறுகையில் இலங்கையில் கொரோன தாக்கம் குறைந்து வருகிறது எனவே இந்தியாவிற்கு முன்னே இலங்கை கொரோனா வைரஸ் தாக்கத்தில் மீண்டு விடும் என்பதனால் இங்கே ஐபில் கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் .எனவே ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தாமல் இலங்கையில் நடத்துமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பிசிசிஐ என்ன நடவடிக்கை எடுக்கும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

முத்தையா முரளிதரன் கருத்து & ஆபத்து

இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் ஒரு கருத்து தெரிவித்துள்ளார், அதில் “ஐபிஎல் போட்டிகளை இலங்கையில் நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை அளவிலேயே மட்டுமே இருக்கிறது. எனக்கு தெரிந்து இதுவொரு நிரந்தர தீர்வாகாது. முதலில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை உலகெங்கிலும் நீக்கப்பட வேண்டும், அதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. இலங்கையில் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வருவார்கள். அவர்களை இங்கு தனிமைப்படுத்த வேண்டும். இது மிகப் பெரிய ஆபத்தை வீர்ரகளுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here