
CSK vs LSG மற்றும் MI vs PBKS ஆகிய இரு போட்டிகளுக்கு பிறகு, ஐபிஎல் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
ஐபிஎல்:
இந்திய ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற ஐபிஎல் தொடர், விறுவிறுப்புடனும், கடைசி ஓவர் வரை திரில்லிங்காகவும் அரங்கேறுகிறது. இந்த தொடரில், பங்கு பெற்றுள்ள அனைத்து அணிகளும் கிட்டத்தட்ட தலா 9 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இதில், லக்னோ, CSK மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மட்டும் தலா 10 போட்டிகளில் விளையாடி உள்ளன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த தொடரில், CSK மற்றும் லக்னோ, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பிறகு புள்ளிப் பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதாவது, குஜராத் டைட்டன்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில், 6 ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் உள்ளது. இந்த பட்டியலில், CSK மற்றும் லக்னோ (LSG) இடையேயான போட்டி மழையால் ரத்தானதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
IPL 2023: மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த பஞ்சாப்…, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
இதனால், LSG மற்றும் CSK அணிகள் விளையாடி 10 போட்டிகளில் 5 ல் வெற்றி 1 ரத்து என 11 புள்ளிகளுடன் 2 மற்றும் 3 வது இடத்தை பிடித்துள்ளனர். இதனை தொடர்ந்து, தலா 10 புள்ளிகளுடன், ராஜஸ்தான் (RR), பெங்களூர் (RCB), மும்பை (MI) மற்றும் பஞ்சாப் (PBKS) ஆகிய அணிகள் 4, 5, 6 மற்றும் 7 வது இடங்களில் உள்ளனர். மேலும், கொல்கத்தா (KKR), ஹைதராபாத் (SRH) மற்றும் டெல்லி (DC) ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.