தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்.., இந்த தேதியில் விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!

0
தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்.., இந்த தேதியில் விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!
தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்.., இந்த தேதியில் விடுமுறை.., வெளியான அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கியது முதல் ஆங்காங்கே கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதன்படி நாளை (மே 5) மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண கோடிக்கணக்கான பக்தர்கள் வருவதால் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போன்று தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோவிலில் முப்பெரும் விழா நாளை பக்தர்கள் படைசூழ அரங்கேற உள்ளது.

விவசாயிகளுக்கு ஜாக்பாட்., மிக குறைந்த வட்டியில் ரூ.3 லட்சத்திற்கு கிசான் கிரெடிட் கார்டு., முழு விபரம் உள்ளே!!!

இதனால் இந்த மாவட்டத்திற்கு நாளை (மே 5) உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து பரமக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

ஆனால் சார் நிலை கருவூலம் மற்றும் அரசு அலுவலகங்களும் அவசர அலுவல்கள் மட்டும் குறைந்த பணியாட்களுடன் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தேனி மற்றும் பரமக்குடி மாவட்டத்தில் நாளை வழங்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 20 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here