IPL 2023: மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த பஞ்சாப்…, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

0
IPL 2023: மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த பஞ்சாப்..., 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!
IPL 2023: மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்த பஞ்சாப்..., 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

MI vs PBKS:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 46 ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய, பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் (9) வந்த வேகத்தில் வெளியேறினார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால், தவானுடன் மேட் ஷார்ட் இணைந்து 2 வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்ந்தனர். இவர்களில், தவான் 30, மேட் ஷார்ட் 27 ரன்களில் பெவிலியன் திரும்ப லியாம் லிவிங்ஸ்டன் (82*) மற்றும் ஜிதேஷ் சர்மா (49*) அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து, 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேஸிங் செய்ய மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.

இதில், ரோஹித் சர்மா டக் அவுட்டாக, இஷான் கிஷன் (75), கேமரூன் கிரீன் (23), சூர்யகுமார் யாதவ் (66) என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசியாக, டிம் டேவிட் 19*, திலக் வர்மா 26* ரன்கள் எடுத்து, 18.5 ஓவரிலேயே (216) இலக்கை அடைந்து மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியானது, மும்பை அணியாக ரோஹித் சர்மா விளையாடி 200 போட்டியாகும். இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது மூலம், 10 புள்ளிகளுடன் 6 வது இடத்தை பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here