அதிரடியான ஆபர்களுடன் ஐபோன் 12 சீரிஸ் -விற்பனை தொடங்கியது!!

0

ஆப்பிள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்தப்படி 2020 ஆம் ஆண்டு நான்கு ஐபோன் மாடல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இதுதான் ஆப்பிள் நிறுவனம் அறிவித்த மாடல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மொபைல் போனுடன் சார்ஜ்ர், இயர்போன் வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

ஐபோன் 12 மாடல்:

இந்த ஐபோன்களை விருப்பமான கலர்கள் மற்றும் வெவ்வேறு ஸ்டோரேஜ் வசதிகளிலும் ஆர்டர் செய்து கொள்ளலாம். ப்ளூ, சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை என்று உங்களுக்கு விருப்பமான கலர்களில் புக் செய்து கொள்ளலாம். இந்த ஐபோன் மாடல்களில் அதிக ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. அவை 64 ஜி.பி, 128 ஜி.பி மற்றும் 256 ஜி.பி. உள்ளன. இந்த மாத தொடக்கத்திலேயே ப்ரீஆர்டர் செய்து கொள்ளலாம் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐபோன் ஸ்டோரேஜ் வசதிகளை பொறுத்து விலைகளும் மாறும். அதாவது 64ஜி.பி.க்கு ரூ.79,000, 128 ஜி.பி.க்கு ரூ.84,900 மற்றும் 256ஜி.பி.க்கு ரூ.94,900. இந்த அனைத்து மாடல்களும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஒரு முக்கியமான ஆஃபர் உள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பழைய ஐபோனை குடுத்துவிட்டு புது ஐபோன் வாங்குபவருக்கு ரூ.22,000 வரை விலை குறைப்பு செய்யப்பட உள்ளது. மேலும் பழைய ஸ்மார்ட்போணை மாற்றி புது ஐபோன் வாங்குபவருக்கு விலைக்கு ஏற்ப கடைசியாக வரும் பில்லில் சலுகை செய்து தரப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பழைய போனினை மாற்றுபவர்களுக்கு சில கேள்வி கேட்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஐபோனுக்கு கவரேஜ் வசதி செய்து தரப்படும் மற்றும் போனை வாங்கிய நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை வாரண்ட்டி கொடுக்கப்படும். கேஷ் ஆன் டெலிவரி வசதி மட்டும் இல்லை, இ.எம்.ஐ.,கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கார்டு ஆன் டெலிவரி, ரூப்பெ போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன்கள் இந்தியா முழுவதும் கிடைக்கும். ஐபோன் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க ஐபோன் நிறுவனம் நிபுணரிடம் உரையாடும் வசதியை புதிதாக கொண்டு வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here