இன்ஸ்டாவில் இப்படி ஒரு வசதியா?? – வரவுள்ள அப்டேட்டால் குஷியான பயனர்கள்!!

0

தற்போது உள்ள இணைய உலகில் பயனர்கள் தங்கள் நேரத்தை பேஸ்புக், யூடுயூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களிலேயே அதிகம் செலவிடுகின்றனர். இதனால் பயனர்களை தங்கள் வசம் தொடர்ந்து வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை இந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இன்ஸ்டாக்ராமும் தற்போது அப்படி ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது இன்ஸ்டாவில் நம் பகிரும் ஸ்டோரியை நம்மை பின்தொடர்பவர்கள் பார்க்க மட்டும் தான் முடியும். ஆனால் அதற்கு லைக்ஸ் செய்யும் வசதி தற்போது இல்லை. இன்ஸ்டாவில் டைரெக்ட் மெசேஜ்களுக்கு வரும் ஸ்டோரிக்களுக்கு மட்டும் ரியாக்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இன்ஸ்டாவின் ஸ்டோரிஸ் பக்கத்திலேயே லைக் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த அப்டேட்டால் ஒரே பயனர் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பல்வேறு லைக்குகளை பதிவிட முடியும் என கூறப்படுகிறது. தற்போது இது குறித்த முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இன்ஸ்டா தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here