உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறிய ரோபோ சங்கரின் மகள் – பாண்டியம்மாவா இது?? ரசிகர்கள் ஷாக்!!

0

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் ரோபோ ஷங்கரில் மகள் தான் இந்திரஜா. விஜய் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இந்திரஜா தற்போது 10 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திரஜா

அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இந்திரஜா. இந்த ஒரு படமே அவரின் கேரியரை தூக்கி நிறுத்தியது. விஜய்க்கு இணையான புகழ் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்திற்கு கிடைத்தது. தனது உடல் எடையை ஒரு பொருட்படுத்தாமல் தனது திறமையை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

படத்தில் நடிப்பதற்கு முன்பே அவரது பல டிக்டாக் விடீயோக்களும் வலைத்தளங்களில் வைரலானது. பல திறமைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். அதன் பிறகே அவருக்கு பிகில் பட வாய்ப்பு கிடைத்தது. ரோபோ ஷங்கர் மகள் என்ற பேச்சு போய் பிகில் பாண்டியம்மாள் என்ற பேச்சு வந்தது. அதன் பிறகு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.

பிகில் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல இன்டெர்வியூ கொடுத்ததும் வந்தார். ஒரு கட்டத்தில் அவரது உருவ அமைப்பை பலரும் கேலி செய்து வந்ததாகவும் வருத்தப்பட்டார். ஆனாலும் அவரது ரசிகர்கள் இந்திரஜாவை ஆறுதல் படுத்தியும் வந்தனர். சில நாட்களாக தொடர்ந்து போட்டோஷூட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வந்தார் இந்திரஜா.

புதுவிதமான கெட்டப்பில் தொடர்ந்து புகைப்படத்தை வெளியிட்டார் இந்திரஜா. கடைசியாக சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு நடக்கும் கொடுமைகளை உணர்த்தும் விதமாக ஒரு கெட்டப் போட்டு போட்டோஷூட் செய்திருந்தார். அந்த புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here