Saturday, April 20, 2024

நைட் கிளப்பில் கைது செய்யப்பட்ட சுரேஷ் ரெய்னா – காரணம் இதுதான்! அவரே கொடுத்த விளக்கம்!!

Must Read

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காத காரணத்திற்காக மும்பையிலுள்ள இரவு விடுதியில் தங்கியிருந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று அதிகாலை கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இரவு நேர பார்ட்டி:

இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிய சுரேஷ் ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்நிலையில் மும்பையிலுள்ள ட்ரகன்பிளே எக்ஸ்பீரியன்ஸ் எனும் இரவு விடுதியில் தங்கியிருந்த சுரேஷ் ரெய்னா, பாலிவுட் பிரபலம் சுஷானா கான், பாடகர் குரு ராந்தவா உள்பட மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இரவு விடுதியில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தங்கியிருந்ததாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி விடுதி செயல்பட்டதாகவும் கூறி மும்பை போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 34 பேர்களில் 13 பெண்கள் இருந்ததால் அவர்களை விடுவித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மீதி உள்ள ஆண்களை கைது செய்த போலீசார் விசாரணைக்குப் பிறகு அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.

ரெய்னா தரப்பு விளக்கம்:

இந்த சம்பவம் தொடர்பாக சுரேஷ் ரெய்னா தரப்பிலிருந்துக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், “சுரேஷ் ரெய்னா ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்படப்பிடிப்பு முடிய தாமதமானது. அதன்பிறகு டெல்லி செல்ல முடிவு செய்திருந்த ரெய்னாவுக்கு ஒரு சிறிய விருந்து கொடுக்க நண்பர்கள் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அவர் அந்த விடுதிக்கு சென்றார்”

2021 ஜனவரி மாசம் வங்கிக்கு இத்தன நாள் ‘லீவு’ – குறிச்சு வச்சுக்கோங்க மக்களே!!

“அவர் மும்பையின் நேரக்கட்டுப்பாடுகள் மற்றும் கொரோனா விதி முறைகள் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. மேலும் அவர் அரசின் இந்த விதிமுறைகளை பற்றி எடுத்து கூறியதும், உடனடியாக ஒப்புக்கொண்டதுடன்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த துரதிர்ஷ்டவசமான, தற்செயலான நிகழ்வு குறித்து வருத்தமும் தெரிவித்தார்.ரெய்னா எப்போதும் அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடப்பவர். இனி எதிர்காலத்திலும் அப்படியே நடந்து கொள்வார்” என கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -