12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி –  இந்தோனேசியா அரசு அறிவிப்பு!!!

0

இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, 12 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு ஓயாமல் அடுத்தடுத்த அலைகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாம் அலை தொற்று இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இருந்தாலும் இந்நிலையில் இருந்து பல நாடுகள் முழுதாக மீண்டு வரவில்லை. இதற்கு அடுத்த மூன்றாம் அலை, குழந்தைகளை தாக்கும் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.

எனவே பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தோனேசியாவின் உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு நிறுவனம் 12-17 வயதுடைய குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் சினோவாக் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோ விடோடோ, 12 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.மேலும் அவர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here