ஸ்மார்ட்போனில் 25% அதிக நேரத்தை செலவிடும் இந்தியர்கள் – ஆய்வில் தகவல்!!

0

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்கள் எவ்வளவு நேரம் அதை பயன்படுத்துகிறார்கள் என தனியார் நிறுவனம் சாரபில் ஆய்வு நடைபெற்றது. அதில் இந்தியர்கள் 25% அதிகமாக செலவிடுகிறார்கள் என ஆய்வின் தகவல் தெரிவிக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு:

ஸ்மார்ட்போன் என்பது நமது வாழ்வில் இன்றியமையாத மின்னணு கருவியாக மாறிவிட்டது. அதன் பயன்பாடுகள் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விவோ நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்கள் பற்றி ஆய்வு ஓன்று நடத்தியது.

அந்த ஆய்வில் 66% இந்தியர்கள் ஸ்மார்ட்போன் தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது என்றனர். 70% பேர் ஸ்மார்ட்போன் அதிக அளவில் பயன்படுத்துவதால் உடல் மற்றும் மன ரீதியாக வாழ்வை பாதிக்கக்கூடும் என்று கூறியதாக விவோ நடத்திய ஆய்வு கூறுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் காரணத்தினால் மக்களிடையே இருந்த சமூக இடைவெளி பற்றிய ஆய்வில், ஸ்மார்ட்போன்கள் தான் மனிதர்களிடையே நிகழும் மாற்றத்தை வெளிக்கொண்டுவர உதவியது, மேலும் குடும்பத்தினர்களுடனும் நண்பர்களுடனும் தொடர்பு கொள்ள உதவியது என்று ஆய்வின் மூலம் தெரியவருவதாக விவோவின் விளம்பர உத்தி துறை இயக்குனர் நிபுன்மார்யா தெரிவித்தார்.

Passengers use smartphones while charging the devices

74% பேர் தங்களது மொபைல் போன்களை ஸ்விச் ஆப் செய்வதன் மூலம் அவர்களது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியும் என தெரிவித்தனர். ஆனால் அவர்களில் 18% பேர் மட்டுமே அவர்களது மொபைல் போன்களை ஸ்விச் ஆப் செய்தனர்.

“மனித உறவுகளிடையே ஸ்மார்ட்போன்கள் மற்றும் அவற்றின் தாக்கம் 2020” என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் இந்த லாக்டவுன் நேரத்தில் ஓடிடி 59% பேரும், சமூக வலைத்தளங்களில் 55% பேரும், விளையாட்டில் 45% பேரும் அவர்களது நேரத்தை செலவிடுகிறார்கள் என கணக்கெடுப்பு கூறுகிறது.

செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட “கார்த்திக்”!!

79% நபர்கள் ஸ்மார்ட்போன்கள் அவர்களது அன்பிற்கு உரியவர்களிடம் நேரத்தை செலவிட உதவுகிறது என கூறினார். 88% மக்கள் மற்றவர்களுடன் இருக்கும் போதும் போன் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டனர். 46% மக்கள் அவர்களது போன்களை ஒரு மணி நேரத்தில் 5 தடவை எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

சைபர் மீடியா ரிசர்ச் (CMR) மூலம் விவோ நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 15 முதல் 45 வயது உடைய 2000 பேர் கலந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் ஸ்மார்ட்போன்கள் மனிதர்களின் தேவைகளின் வெளிப்பாடாகவும், வளைந்து கொடுக்கும் வகையிலும் இருக்கிறது என்றும் ஆனால் அதை அதிகமாக பயன்படுத்துவது அதற்கு அடிமையான நபராக நம்மை மாற்றி விடும் என்று இந்த ஆய்வின் முடிவில் உறுதியாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here