இந்தியாவில் 59 சீன செயலிகளின் தடை எதிரொலி – இந்திய இணையதளங்களுக்கு சீனாவில் தடை

0

இந்தியாவில் 59 சீன செயலிகளை தடை செய்த நிலையில் தற்போது சீனா இந்திய இணையதளங்களை முடக்கியுள்ளது.

இந்தியாவில் சீன செயலிகள் முடக்கம்..!

china apps
china apps

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக சீனா பொருட்களை தவிர்ப்பது, சீன செயலிகளை மொபைலில் இருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகள் மக்கள் தாங்களாகவே முன்வந்து செய்கின்றனர். இந்நிலையில் பெற்ற டிக் டாக், ஹலோ, ஷேர் இட் உட்பட 59 சீன செயலிகளை மத்திய அரசு நேற்று அதிரடியாக தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

சீனா பதிலடி..!

இந்தியா 59 சீன செயலிகளை தடை செய்ததற்காக பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தொலைக்காட்சிகள், ஊடகங்கள் இணையதளங்களை சீன அரசு முடக்கியுள்ளது. சீனாவில் வெளிநாட்டு இணையதளங்களை பயன்படுத்தவோ, பார்க்கவோ தடை இருந்தாலும், விபிஎன் பயன்படுத்தி இத்தனை நாட்களாக பயன்படுத்த முடிந்தது. இந்நிலையில் தற்போது கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஐபோன்களில் விபிஎன் பயன்படுத்தியும் இந்திய இணையதளங்களை பயன்படுத்த முடியவில்லை என தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் இந்திய தொலைக்காட்சி சேனல்கள் தற்போது ஐபி டிவி மூலமே பார்க்க முடிகிறது. இருப்பினும் அதிவேக விபிஎன் சேவையும் ஐபோன் மற்றும் டெஸ்க்டாப்புகளில் கடந்த இரு நாட்களாகச் செயல்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here