பஞ்சாப்பில் விவசாயிகள் மறியல் போராட்டம் – ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி நட்டம்!!

0
Amritsar: Farmers block a railway track as they participate in 'Rail Roko Andolan' during a protest against the farm bills passed in both the Houses of Parliament recently, at village Devi Dass Pura, about 20km from Amritsar, Thursday, Sept. 24, 2020. (PTI Photo)(PTI24-09-2020_000092A)

வேளாண் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதன் காரணமாக, ரயில்வே துறைக்கு ரூ.1,200 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாதி வழியில் நிறுத்தம்

மத்திய அரசு, வேளாண் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்கு, விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அமரீந்தர் சிங் தலைமையில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் மிகப்பெரிய போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால், பயணியர், சரக்கு ரயில்கள் ரத்தாகி வருகின்றன. இந்திய ரயில்வேக்கு ரூ.1,200 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ பஞ்சாபின் பல பகுதிகளில், விவசாயிகள் ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். சில ரயில்கள், பாதி வழியில் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரயில்வேக்கு சுமார் ரூ.1,200 கோடி நட்டம் ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here