இப்படியே போனா T20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வி தான்.., சர்ச்சை கூறிய கருத்தை வெளியிட்ட முன்னாள் பவுலர்!!

0
இப்படியே போனா T20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வி தான்.., சர்ச்சை கூறிய கருத்தை வெளியிட்ட முன்னாள் பவுலர்!!
இப்படியே போனா T20 உலக கோப்பையில் இந்தியாவுக்கு தோல்வி தான்.., சர்ச்சை கூறிய கருத்தை வெளியிட்ட முன்னாள் பவுலர்!!

T20 உலக கோப்பையை தொடரை இந்திய அணி வெல்வது மிக கடினம் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

காரணங்களை அடுக்கும் முன்னாள் வீரர்!

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பை தொடரை தவறவிட்டதை அடுத்து T20 உலக கோப்பையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இந்த தொடருக்கான இந்திய அணி வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அறிவிக்க உள்ளனர். அதற்காக வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை நிரூபித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து பேச்சாளர் ஆர் பி சிங் இந்திய அணி T20 உலக கோப்பை தொடரை வெல்லாது என சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இதற்கு முன்னர் நடைபெற்ற தொடர்களில் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஃபினிஷராக இருந்து பல போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் இவர் இந்தியா T20 உலக கோப்பைக்கான அணியில் இடம்பெற மாட்டார் என்று தான் தெரிகிறது. மேலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை இந்திய தேர்வர்கள் அனைவரும் தற்போது நடைபெற்ற எந்த தொடர்களிலும் அணியில் எடுக்கவில்லை. இவர்களை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் சொதப்பும் வீரர்களுக்கே இந்திய அணி வாய்ப்பு கொடுக்கிறது.

இது போன்ற திறமையான வீரர்களை இந்திய அணி ஏன் தேர்வு செய்யவில்லை என ரசிகர்கள் தற்போது வரை குழப்பத்தில் உள்ளனர். இதேபோன்று T20 உலக கோப்பைக்கான இந்திய அணியையும் தேர்வு செய்தால் நிச்சயம் T20 உலக கோப்பையை வெல்ல முடியாது. இதனால் திறமையான வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தேர்வு குழுவினர் இந்திய அணியை வெளியிடுவார்கள் என ஆர் பி சிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here