ஆசிய கோப்பை இறுதி ஆட்டம் 2022.., பாக்கிஸ்தான் அணி பவுலிங் தேர்வு!! பட்டத்தை வெல்ல போவது யார்?

0

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இப்போட்டி இன்று இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணியின் நிலை:

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது. ஆனால் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி தொடர் வெற்றியை பெற்று இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இலங்கை அணியின் நிலை:

சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி பாகிஸ்தானை அணியை எளிதாக வீழ்த்தி அசத்தியது. இதையடுத்து கடந்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் பைனலுக்கு முன்னேறியுள்ளது. இதனால் இன்றைய போட்டியிலும் பாகிஸ்தானுக்கு டப் கொடுத்து மீண்டும் வீழ்த்தி 6 வது முறையாக வெல்வார்கள் என்று தெரிகிறது.

இரு அணிகளின் பிளேயிங் 11:

  • இலங்கை (பிளேயிங் லெவன்): பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(wk), தனுஷ்க குணதிலகா, தனஞ்சய டி சில்வா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(c), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, பிரமோத் மதுஷன், மஹீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்க
  • பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): முகமது ரிஸ்வான்(wk), பாபர் ஆசம்(c), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது நவாஸ், ஷதாப் கான், ஆசிப் அலி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்

டாஸ்:

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெற்று ஆசிய கோப்பை பட்டத்தை தட்டிச் செல்வார்கள் என பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here