நாட்டைக் காப்பாற்ற நன்கொடையை அள்ளிக் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள்..!

0

கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகளும் போராடி வருகிறது. அரசுக்கு உதவி செய்யும் வகையில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை நன்கொடையாகக் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர்களும் பலரும் அரசுக்கு உதவி செய்யும் வகையில் நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

நன்கொடை கொடுக்கும் பிரபலங்கள்..!

கொரோனா வைரஸ் தாக்கம் இந்திய மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் சூறையாடக் காத்திருக்கிறது. இந்நிலையில் பிரதமரும் நாட்டு மக்களை நன்கொடை கொடுத்து நாட்டைக் காப்பாற்ற அழைப்பு விடுத்த நிலையில் மக்களும் நன்கொடை கொடுத்து வருகின்றனர்.

மக்களுள் மக்களாகப் பல முன்னணி பிரபலங்களும் அதிகளவிலான நன்கொடை கொடுத்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் நன்கொடை..!

  • சச்சின் டெண்டுல்கர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
  • சௌரவ் கங்குலி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியைப் பாதிக்கப்பட்டோருக்கும், தேவைப்படுவோருக்கும் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
  • சுரேஷ் ரெய்னா பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 52 லட்சம் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
  • கெளதம் கம்பீர் தனது MP LAD (Local Area Development) நிதியில் இருந்து 1 கோடி ரூபாயும், தனது ஒரு மாத சம்பளத்தையும் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.
  • அஜின்க்யா ரகானே 10 லட்சம் ரூபாய், ரிச்சா கோஷ் 1 லட்சம் ரூபாயும், லட்சுமி ரத்தன் சுக்லா 3 மாத சம்பளமும், இர்பான் பதான் மர்றும் யூசப் பதான் 4000 முகமுடிகளை உள்ளூர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்குக் கொடுத்துள்ளனர்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here