நடிகர் விவேக் மறைவால் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட குழப்பம் – இயக்குனர் முடிவு!

0

சினிமாத்துறையை பொறுத்தவரை ஒவ்வொரு கலைஞர்களும் அவர்களது திறமையை வெளிக்கொணருவதில் படாத பாடு படுகிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் பிரபலத்தை விட கஷ்டங்களும், தடைகளும் தான் ஏகப்பட்டது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ‘விடா முயற்சி விஸ்பரூப வெற்றியை கொடுக்கும்’ என்பதில் உறுதியாய் இருந்து அடுத்த கட்டத்தை நோக்கி நகருபவர்களால் மட்டுமே இந்த துறையில் சாதிக்க முடியும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்படி மக்களை வாய் விட்டு சிரிக்க வைப்பதே தனது நடிப்புக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடும் வரிசையில் இருப்பவர் நடிகர் விவேக். அவரது மறைவுக்கு பிறகும் பேர் சொல்ல பல படங்களும், சேவைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதன் படி, லைகா நிறுவனம் தயாரிப்பிலும், ஷங்கர் இயக்கத்திலும் உருவான இந்தியன் 2 பட ஷூட்டிங் சில காரணத்தால் 70 சதவீத காட்சிகள் எடுக்கப்பட்டதுடன் நிறுத்தப்பட்டது.

தற்போது பல பேச்சுவார்த்தைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் முயற்சியில் இன்று முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கமலுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் விவேக் தற்போது எதிர்பாரா விதமாக மறைந்ததால் அவருக்கு பதிலாக வேறு யார் நடிப்பார் என கேள்வி எழுந்தது. அதற்கு இயக்குனர் அந்த ரோலில் குரு சோமசுந்தரம் நடிக்க போவதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த இந்தியன் 2 திரைப்படம் விவேக் அவர்களுக்கு கமலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here