உலகக்கோப்பையில் அசத்தும் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி..! டெஸ்டில் சொதப்பும் ஆண்கள் அணி..!

0

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பெண்கள் உலகக்கோப்பைக்கான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி தனது தொடர்ச்சியான 4வது வெற்றியை பதிவு செய்தது. ஆனால் மறுபுறமோ இந்திய ஆண்கள் அணி நியூஸிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மோசமாக ஆடி வருகிறது.

இலங்கையை வதம் செய்த இந்தியா..!

பெண்கள் 20-20 உலகக்கோப்பையில் இந்திய அணி ஏற்கனவே ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி உள்ள நிலையில் இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 4 வெற்றிகளைப் பெற்று அசத்தி உள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் ராதா 4 விக்கெட் சாய்த்தார்.

114 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி (47) மிரட்ட இந்திய அணி 14.4 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 116 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

டெஸ்டில் இந்திய ஆண்கள் அணி ஏமாற்றம்..!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்பு களமிறங்கிய நியூஸிலாந்து அணி தற்போது வரை விக்கெட் எதுவும் இலக்காமல் 23 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here