இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தர்மசாலாவில் நடைபெற உள்ளது. நியூஸிலாந்து அணியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
3 ஒருநாள் போட்டிகள்:
தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தர்மசாலாவில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. தர்மசாலாவில் குளிர் அதிகமாக இருப்பதால் வீரர்கள் அந்த தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது முக்கியமான ஒன்றாகும்.
போட்டி நடைபெறும் தர்மசாலாவில் மாலை மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் போட்டி தடைபட நிறைய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.
அணிகள் விபரம்:
இந்திய அணி – ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.
தென் ஆப்ரிக்க அணி – குயின்டான் டி காக் (கேப்டன்), ஜெனிமான் மலான், ஸ்முட்ஸ் அல்லது வான்டெர் துஸ்சென், பிளிஸ்சிஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கேஷவ் மகராஜ், பீரன் ஹென்ரிக்ஸ் அல்லது ஜார்ஜ் லின்டே, அன்ரிச் நார்ஜே, நிகிடி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |