2021-கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளது.! மத்திய அரசு அறிவிப்பு.!

0

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2011கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த நிலையில் 2021 கான கணக்கெடுப்பு ஏப்ரல் 1ல் தொடங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு

ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்தும் நாடு முழவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மக்கள் கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்றும் அது எப்பொழுது நடைபெற வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது. இந்த அறிவிப்பு மத்திய அரசின் அரசிதழில் குறிப்பிட்டிருந்தது, அதாவது 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 30-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். இந்த கணக்கெடுப்பின்போது 31 கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்களை பதிவு செய்ய வேண்டும்.

கேள்விகள்

  1. வீட்டு எண்
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண்
  3. வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள்
  4. கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு
  5. வீட்டின் தற்போதைய நிலவரம்
  6. வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
  7. தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை
  8. குடும்ப தலைவரின் பெயர்
  9. குடும்ப தலைவரின் பாலினம்
  10. குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா?
  11. வீட்டின் உரிமையாளர் விவரம்
  12. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
  13. வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள்
  14. குடிநீர் கிடைக்கும் வழிகள்.
  15. எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது?
  16. விளக்கு வசதி கிடைக்கும் விவரம்?
  17. கழிவறை உள்ளதா?
  18. எந்த வகை கழிவறை?
  19. மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது?
  20. குளியலறை வசதி உள்ளதா?
  21. சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா?
  22. சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள்
  23. ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா?
  24. டெலிவிஷன் இருக்கிறதா?
  25. இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
  26. லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா?
  27. டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா?
  28. சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா?
  29. கார், ஜீப், வேன் உள்ளதா?
  30. வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம்
  31. மொபைல் போன் எண் போன்ற 31 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here