அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்குவேன், கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை – ரஜினி செய்தியாளர் சந்திப்பு..!

0

நடிகர் ரஜினி அரசியல் அறிவிப்பு விடுத்து 2 ஆண்டுகள் முடிவடைந்து உள்ள நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களை சந்தித்த அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

1996ல் என் பெயர் இழுக்கப்பட்டது..!

மாவட்ட செயலாளர்களை சந்திப்பதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தார். அவை,

  • 96-இல் எதிர்பாராத விதமாக அரசியலில் என் பெயர் இழுக்கப்பட்டது. சிஸ்டம் சரிசெய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் நன்றாக இருக்காது. 1995 முதல் நான் அரசியலுக்கு வர உள்ளதாக ஒருபோதும் கூறியதில்லை.
  • சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை. அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள்.
  • கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை. முதலமைச்சர் பதவியை நான் எப்போதுமே நினைத்துப் பார்த்தது இல்லை. அரசியல் மாற்றத்துக்கு 3 திட்டங்களை வைத்துள்ளேன்.
  • கட்சி விழாக்கள், நிகழ்வுகளில் ஆட்சியில் இருப்பவர்கள் வரத்தேவையில்லை.கட்சித் தலைமை என்பது எதிர்கட்சி போன்றது.
  • அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒருவரை நாம் முதலமைச்சராக்குவோம்.
  • கட்சித் தலைவனாக இருந்து நல்ல மனிதரை முதலமைச்சராக உட்காரவைப்பேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு நான் பாலமாக இருப்பேன்.
  • முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன். மன்றப் பொறுப்பாளர்களுக்கு முன்னுதாரனமாக நானே பதவி வேண்டாம் என்று சொல்கிறேன். முதலமைச்சர் பதவி வேண்டாம் என நான் கூறுவது தியாகம் அல்ல.
  • நல்ல தலைவர்களை உருவாக்குவபர்தான் நல்ல தலைவன்.
  • அசுரபலத்துடன் கூடிய திமுகவையும், அதிமுகவையும் நாம் எதிர்கொள்ளப்போகிறோம். ஆட்சியையும், குபேரன் கஜானாவையும் அதிமுக கையில் வைத்திருக்கிறது.
  • ஒரு நல்ல அரசியல் தலைவனை உருவாக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here