ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிரகாச வெற்றி.., சுதாரித்து கொண்ட அணி வீரர்!!!

0
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிரகாச வெற்றி.., சுதாரித்து கொண்ட அணி வீரர்!!!
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிரகாச வெற்றி.., சுதாரித்து கொண்ட அணி வீரர்!!!

2023ம் ஆண்டு தொடக்கம் முதல் இந்தியாவில் நடைபெற்ற இலங்கை, நியூசிலாந்து அணிகளுடனான தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 9ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற இது முக்கிய தொடராகவும் கருதப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் இதுவரை நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகள் பற்றி பார்ப்போம்.1947-48 முதல் இரு அணிகளும் 27 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி- 10 தொடர்களும், ஆஸ்திரேலிய அணி- 12 தொடர்களையும் வென்றுள்ளன. 5 டெஸ்ட் தொடர்கள் டிராவில் முடிந்தது. ஆனால் இந்தியாவில் நடைபெற்ற 14 டெஸ்ட் தொடர்களில் 8-4 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 2 டெஸ்ட் தொடர்கள் டிராவில் முடிந்துள்ளன.

டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டீங்களா?? என்னப்பா சொல்றீங்க.., ஹர்திக் பாண்டியா பளீச் பேட்டி!!!

மொத்தமாக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 102 டெஸ்ட் போட்டிகள் மோதியுள்ளனர். இதில் இந்தியா- 30, ஆஸ்திரேலியா- 43, டிரா- 29 என உள்ளது. எனவே, இதுவரை இந்திய அணிக்கு இந்திய மண்ணில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் உஸ்மான் கவாஜா “பயிற்சியின் போது புற்கள் நிறைந்த பிட்ச்-ம், போட்டியின் போது புற்கள் இல்லாத பிட்ச்-ம் எங்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் இனியும் நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை நம்ப மாட்டோம்” என கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here