அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மனு.., அதிரடி உத்தரவை பிறப்பித்த ஐகோர்ட் !!

0
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மனு.., அதிரடி உத்தரவை பிறப்பித்த ஐகோர்ட் !!
அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மனு.., அதிரடி உத்தரவை பிறப்பித்த ஐகோர்ட் !!

திருப்பூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற இந்து முன்னேற்ற கழக கட்சியின் தலைவர் கோபிநாத் கொடுத்த மனுவை குறித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

விளம்பர பலகைகள்:

தனியார் நிறுவனங்கள் தனது கம்பெனியை பிரபலமடைய சாலை சந்திக்கும் முனைகளிலோ அல்லது தெரு ரோட்டோரங்களிலோ மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களின் மேற்கூரை என பல்வேறு இடங்களில் பிளக்ஸ், பேனர் மற்றும் ‘ஹார்டிங்ஸ்’ எனப்படும், விளம்பர பலகைகள் வைக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் வாகனங்கள் ஓட்டி வரும் நபர்களை திசை திருப்பும் வகையில் ரோட்டில் பிளக்ஸ், பேனர் மற்றும் ‘ஹோர்டிங்ஸ்’ போன்ற விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்று ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் அனுமதியின்றி திருப்பூரில் விளம்பர பலகைகளை வைத்ததை அகற்ற கோரி இந்து முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் கோபிநாத் மனுவை கொடுத்தார்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே கவனம்.., பெயர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருக்கா? இது தான் கடைசி வாய்ப்பு!!!

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை அகற்ற கோரிய மனுவை 3 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என்று மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here