டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டீங்களா?? என்னப்பா சொல்றீங்க.., ஹர்திக் பாண்டியா பளீச் பேட்டி!!!

0
டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டீங்களா?? என்னப்பா சொல்றீங்க.., ஹர்திக் பாண்டியா பளீச் பேட்டி!!!
டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டீங்களா?? என்னப்பா சொல்றீங்க.., ஹர்திக் பாண்டியா பளீச் பேட்டி!!!

இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவது குறித்து நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி T20 தொடர்களில் தொடர்ந்து வெற்றியை கைப்பற்றி வருகின்றனர். இதனால் இவர் இந்திய அணியின் வருங்கால கேப்டன் ஆவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியாவிடம் டெஸ்ட் போட்டி குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதற்கு பதிலளித்த அவர் தற்போது நான் பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த நேரத்தில் எனக்கு இந்திய அணியை தலைமை தாங்கும் பொறுப்பை கொடுத்தாலும் அதையும் சரிவர செய்து வெற்றியை கைப்பற்ற வேண்டும் என முயற்சி செய்து வருகிறேன். அதனால் இந்த நேரத்தில் நான் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன்.

IPL போட்டியால் இந்திய அணிக்கு இப்படி ஒரு ஆபத்தா?? சூசகமாக எச்சரித்த ரவி சாஸ்திரி!!!

இதைத் தாண்டி என்னுடைய உடல் ஒத்துழைத்தால் கண்டிப்பாக டெஸ்ட் தொடரிலும் விளையாடுவேன் என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது இத்தனை நாள் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் ஜொலித்துக் கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா தற்போது கேப்டன்ஷிப்பிலும் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். மேலும் T20 போட்டிகளில் தனது சாகசத்தை நிகழ்த்திய இவர் இனி வரும் நாட்களில் டெஸ்ட், T20, ஒருநாள் என அனைத்து சர்வதேச தொடர்களிலும் ஜொலித்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here