சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்., விம்சர்சையாக கொண்டாடிய மாவீரன் படக்குழுவினர்!!

0
சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்., விம்சர்சையாக கொண்டாடிய மாவீரன் படக்குழுவினர்!!
சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவம்., விம்சர்சையாக கொண்டாடிய மாவீரன் படக்குழுவினர்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி படுதோல்வியடைந்தது. அவரின் சினிமா கேரியரில் ரொம்ப மோசமான திரைப்படம் பிரின்ஸ் படமாக தான் இருக்க முடியும். இந்த கரையை துடைக்கும் விதமாக சிவா அடுத்த படத்தில் கண்ணும் கருத்துமாய் நடித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது இவர் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்த அதிதி சங்கர் நடிக்கிறார். அது போக யோகி பாபு, சுனில், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

சூப்பர் அப்டேட் .., தளபதி 67ல் களமிறங்கும் Agent Tina.., அப்ப கண்டிப்பா இது LCU தான் போல!!

அதுமட்டுமின்றி நகைச்சுவை மன்னன் கவுண்டமணியும் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாவீரன் படக்குழுவினர் ஒரு போஸ்டரை வெளிட்டுள்ளனர். அதாவது, நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மாவீரன் படக்குழுவினர் அவரை வாழ்த்தும் விதமாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here