தனது வாய்ப்பை வீணடித்த ப்ரித்வி ஷா – கோஹ்லியின் நம்பிக்கை வீண், வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

0

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ப்ரித்வி ஷா டக் அவுட் ஆகி அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்தியாஅணி 3 ஒருநாள், 3டி 20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் முடிந்த நிலையில் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் துவங்கியது. முதல் போட்டி மட்டும் பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்திய அணி சார்பாக ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் தொடக்கம் தந்தனர். ஆனால் தொடக்கத்திலே இந்திய அணிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ப்ரித்வி ஷா தான் சந்தித்த 2வது பந்தில் கிளீன் போலடாகி டக் அவுட் ஆனார். இது ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இவரின் பலவீனமான ஸ்விங்கில் ஸ்டார்க் இவரை போலடாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன் என்று கூறிய விராட் கோஹ்லிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பார்மில் இல்லாத நிலையில் அணியில் தேர்வு:

தற்போது அனைவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியை விமர்சித்து வருகின்றனர். 2 பயிற்சி போட்டிகளிலும் பார்மில் இல்லாத ப்ரித்வி ஷாவை ஏன் அணியில் எடுக்க வேண்டும்?? பயிற்சி போட்டியில் சிறப்பாக விளையாடிய சுப்மங் கில்லை எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் துவக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுலை ஏன் அணியில் எடுக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை வெல்ல விராட் கோஹ்லியின் ‘மாஸ்டர் பிளான்’!!

ப்ரித்வி ஷா பார்மில் இல்லை என்பது அனைவரும் தெரிந்த விஷயம். ஆனாலும் அவரை அணியில் தேர்வு செய்துள்ளார்கள். ஆகையால் இது தொடர்பாக விராட் கோஹ்லிக்கு மேல் தரப்பில் இருந்து பிரஷர் வந்துள்ளதா??என்றும் விமர்சித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், ஏற்கனவே ப்ரித்வி ஷா பேட்டிங் முறையில் தவறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மட்டும் அல்ல பல முன்னணி வீரர்கள் இதைத்தான் கூறி வந்தனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here